Tuesday, September 27, 2011

இந்தியா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

முப்பக்கமும் கடலால் சூழ்ந்திருக்கும்
எங்கள் இந்திய தேசம் !
ஒரு பக்கம் மட்டும் தீவாய் நிறைந்திருக்கும்
......எங்கள் இந்திய தேசம் !
பார் எங்கிலும் பசுமையாய்
பயிர்கள் விளைந்திருக்கும் !
எங்கள் இந்திய தேசம் !
அந்த பசுமயிலே எங்கள்
பாரத தாய் மக்களின் பசி போக்கும்
எங்கள் இந்திய தேசம் !
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு என்று
அன்றே பாடினான் எங்கள் கவி பாரதி !
எம்மதமும் சம்மதமே ? !
என்று மத சார்பற்று வாழும்
எங்கள் இந்திய தேசம் !
வேற்று தாய் மக்களும் கூட
ஒரு தாய் பிள்ளை போல்
சகோதர உணர்வுகளுடன்
வாழ்ந்திடும் எங்கள் இந்திய தேசம் !
பெண்களை கண்களாய்
போற்றிடும் எங்கள் இந்திய தேசம் !
அயலவர் எல்லாம் கண்டு
சிறப்பு கொள்ளும்
எங்கள் இந்திய தேசம் !
இந்த புனித பூமியில்
நான் ஒரு இந்திய குடிமகன் {ள்}
என்று பெருமையோடு சொல்லி கொள்வேன் !




Thursday, August 4, 2011

மழை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



நீ வரும் நாளை யாருக்கும் சொல்வதில்லைஆனாலும்

நீ வரும் வேளை கண்டு தோகை விரித்தாடியது மயில்கள் !

நீ வரும் நாளை யாருக்கும் சொல்வதில்லை ஆனாலும்

நீ வரும் வேளை வானில் தோன்றுவதில்லை நிலா !

நீ வரும் வேளை யாருக்கும் சொல்வதில்லை ஆனாலும்

நீ வந்து சென்ற நாள் மட்டுமே மண்ணில் முளைக்கும் காளானாய் !

இப்படி உனக்காகவே படைக்கப் பட்ட இயற்கைதான் எதனை எத்தனை ?

நிலவை ரசிக்கும் நான் உன்னையும் தான் காதலிக்கிறேன் !

நீ வரும் நாளுக்காக தவம் இருக்கிறேன்

உன்னை நான் கட்டி தழுவி முத்தமிட !

என் மேல் சாரலாய் விழும் உன்னை

நான் தழுவி கொண்டு உன்னில் என்னை தொலைக்க !

கோடையிலும் நான் காத்திருப்பேன்

என்னை நீ கட்டி தழுவுவாயா என்று !

என்னை படைத்த ஆண்டவன்

என் கண் முன் தோன்றினால்

நான் அவனிடம் கேட்பேன்

நீ வரும் வேளை மட்டுமே

நான் பிறக்க வேண்டும்

நீ மறையும் அந்த நொடியே

என்னுயிரும் பிரிந்திட வேண்டும் ! 

குப்பைதொட்டி


மனம் மாறவில்லை உனக்கு
நீ ஒரு பெண்ணாய் பிறந்தும் கூட
நான் உனக்கு பெண்ணாய் பிறந்த
காரணத்தால் தூக்கி எறிந்தாயே
என்னை குப்பைதொட்டியில் !

கல்லறையில்....

புரியவில்லை எனக்கு இன்னமும்
ஏன் என் மனம் உன்னையே
நேசிகின்றது என ?
நீ என்னை வெறுத்தாலும் கூட
என் மனம் உன்னையே
சுவாசிக்கும் மூச்சு காற்றாய் !
என்றாவது ஒரு நாள் நீ
என்னை நேசிக்க மாட்டாயா என்று ?
என் இதயம் காத்திருக்கும் என் கல்லறையில் !

நான்- நீ

எனக்குள்ளே நீயுமாக நான்
உனக்குள்ளே நானுமாக நீ
வாழ்ந்த தருணங்கள்
எங்கே போனது ?
துயில் கொண்டு விழிக்கும் போது
மறையும் கனவாய் போனதோ பெண்ணே ?
நான் தேடி கொண்டிருக்கின்றேன்
அத்தருணங்களை பித்தனாய் !

வியாபாரம் .....

பெறுவதற்கு ஒன்றும் இல்லை என்னிடம்
நான் உன் மேல் கொண்டுள்ள காதலை தவிர !
என் அன்பை மட்டும் வாங்க மறுத்து
நீ என்னை வியாபாரம் பேசினாய்
நம் திருமணத்தில்
வரதட்சணை என்னும் பெயரில் !