Thursday, August 4, 2011

மழை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



நீ வரும் நாளை யாருக்கும் சொல்வதில்லைஆனாலும்

நீ வரும் வேளை கண்டு தோகை விரித்தாடியது மயில்கள் !

நீ வரும் நாளை யாருக்கும் சொல்வதில்லை ஆனாலும்

நீ வரும் வேளை வானில் தோன்றுவதில்லை நிலா !

நீ வரும் வேளை யாருக்கும் சொல்வதில்லை ஆனாலும்

நீ வந்து சென்ற நாள் மட்டுமே மண்ணில் முளைக்கும் காளானாய் !

இப்படி உனக்காகவே படைக்கப் பட்ட இயற்கைதான் எதனை எத்தனை ?

நிலவை ரசிக்கும் நான் உன்னையும் தான் காதலிக்கிறேன் !

நீ வரும் நாளுக்காக தவம் இருக்கிறேன்

உன்னை நான் கட்டி தழுவி முத்தமிட !

என் மேல் சாரலாய் விழும் உன்னை

நான் தழுவி கொண்டு உன்னில் என்னை தொலைக்க !

கோடையிலும் நான் காத்திருப்பேன்

என்னை நீ கட்டி தழுவுவாயா என்று !

என்னை படைத்த ஆண்டவன்

என் கண் முன் தோன்றினால்

நான் அவனிடம் கேட்பேன்

நீ வரும் வேளை மட்டுமே

நான் பிறக்க வேண்டும்

நீ மறையும் அந்த நொடியே

என்னுயிரும் பிரிந்திட வேண்டும் ! 

No comments:

Post a Comment